தாலாட்டு பாட தாய்க்கும் நேரமில்லை
கைகோர்த்து விளையாட கூட்டாளி யாருமில்லை
அண்ணனோ அக்காவோ யாரோடும் பிறக்கவில்லை
விளையாட உன்னையன்றி என்னோடு ஒருவரில்லை
அம்மா கொஞ்சம் நவீனமாகி வேலைக்கு சென்றுவிட்டாள்
அப்பாவோ செல்வம் சேர்க்க தேசமெங்கும் சுற்றிவிட்டார்
காக்கா கதை சொல்ல தாத்தா பாட்டி இல்லை
அபார்ட்மென்ட் வாழ்க்கையில் அக்கம் பக்கம் ஆட்களில்லை
பரப்பரப்பான வாழ்வின் பரிசு இதுதான் கண்ணா
கசப்பான உண்மை இதை உணர்ந்துவிடு கண்ணா
தனிமையை இப்போதே பழகிக்கோள் கண்ணா
தாயின்றி போனாலும் காவலுக்கு நானிருக்கேன்
கலங்காதே நீ கண்ணுறங்கு கண்ணா !!
No comments:
Post a Comment