மார்கழி மாதம் எல்லா வித பசி உள்ளவர்களுக்கும் விருந்தளிக்கும் மாதம்.உணவின் பசி கொண்டவர்க்கு பார்த்தசாரதி கோயில் சக்கரை பொங்கல்.
பக்தி ரசம் வேண்டுவோர்க்கு கோயில் தோறும் திருவிழா.ஆனால் நான் சொல்ல போவது கலை பசியும் அந்தன் ருசியும் அறிந்தவர்க்கு.
டாக்டர் . பத்மா சுப்ரமணியத்தின் "பரிபாடல் முதல் பாரதி வரை" என்ற நாடிய நிகழ்ச்சியை அண்மையில் கண்டு களித்தேன்.
பரிபாடல் பாடல் ஒன்றில் நிகழ்ச்சி தொண்டகியது. வண்டு ஊதும் அழகும் , தும்பி பறக்கும் அழகும் , அருவி பாயும் அழகும் அவர் அபிநயத்தில் மிக சிறப்புற அமைந்தது .
திருக்குறளில் அடுத்த காட்சி. குடும்ப தலைவி தலைவனின் கடமைகள் என்ற பொருளில் அமைந்த ௧0 (பத்து) குறட்பாக்களை காயத்ரி கண்ணன் பாட்டிசைக்க , பத்மா ஆடிய அழகை காண கண் கோடி வேண்டும்,. குழல் இனிது யாழ் இனிது என்ற குறளில் ,குழல் இனிது யாழ் இனிது பத்மாவின் நடனம் இனிது என்று சேர்க்க சொல்ல வேண்டும். யான் நோக்கிற் என்னை என்ற குறளிற்கு ,காதல் ரசம் சொட்ட்ட சொட்ட அதில் நான் நனைத்தேன்.
மாயமோ மருட்கை என்ற பாடலில் நாராயணனின் அவதாரங்களை மிக அற்புதமாக படம் பிடித்தார். கண்ணன் மண்ணை உண்ட பின் வாய் திறந்து உலகம் முழுவதையும் காட்டியதையும் சொல்ல வார்த்தைகள் குறைவு.மேலும் நரஷிம , வாமன அவதாரங்கள் அதி அற்புதம் .
சுந்தரரின் திருமணமும் , அவரின் திருமணத்தில் ஈசன் வந்து ஆவணத்தை காட்டி, நீயும் உன் வம்சமும் என் அடிமைகள் என்ற கதையை மிக சிறப்பாக தன் முகத்தில் காட்டினர்.முதியவராக வந்த ஈசன் போல பத்மா நடந்தது, நெஞ்சை விட்டு அகலாது.
கற்பூரம் நாறுமோ கமலா பூ நாறுமோ என்ற நாச்சியார் திருமொழி , காயத்ரி கண்ணனின் வாய் மொழியில் மிக இனித்தது. படி படியாக கம்பன் காலத்திற்கு வந்தார்கள் , சீதை சபைக்கு வந்த அழகை வருணித்தமைக்கு கம்பனை புகழ்வதா ? சீதையாக தெரிந்த பத்மாவை புகழ்வதா தெரியவில்லை .
நாயன்மார்களுள் ஒருவரான நந்தனாரை பாடுகையில் சிறிது கிராமிய இசையும் சேர்ந்து , விழா மிக சிறப்பாக மெருகேறியது . மலை போல ஒரு மாடு வழி மறைக்குதே என்று முந்தைய கட்சேரியில் அருணா சாய்ராம் அவர்கள் பாடியதை அப்படியே நேரில் கண்டது போல் இருந்தது.
இறுதியாக பாரதியின் காலத்திற்கு வந்து , "பாரத தேசம் என்று பெயர் சொல்லுவார் " என்ற பாடலில் உள்ளத்தில் இந்தியாவின் பெருமை பெருக்கெடுத்து.கங்கை நதி புரத்தின் கோதுமை என்ற வரிக்கு பத்மா கோதுமை பெசைந்தது , ரசனையின் உச்ச கட்டம் .
நட்டுவாங்கம் பாடிய திருமதி மதுவந்தி அருண் , காயத்ரி கண்ணன், வீணை மீட்டி ,பாடலும் இசைத்த பத்மாவின் உறவினர் கண்ணன் அதனை பெரும் மிக பெரிய பலம் .மொத்தத்தில் அது ஒரு அழகிய பூச்சரம் . விவரிக்க முற்பட்டாலும் கடலில் ஒரு துளியை பற்றி மட்டும் பேசுவது போலாகும்.
No comments:
Post a Comment