ஒவ்வொரு உணர்விற்கும் இலக்கணம் வகுத்து இப்படி தன வாழவேண்டும் என்று சொன்னவர்கள் தமிழர்கள்.தொல்காப்பியம் தொடங்கி,சங்க இலக்கிய தலைவன் தலைவி காதல் கொள்ளும் அழகை அகநானூற்று பாடல்களை வடித்து ,இன்றைய புது கவிதைகள் வரை , காதல் பற்றி பறைசாற்றதவர்களே இல்லை எனலாம் .. இனினும் என்னுயிர் தோழமை பாரதியினின் ஒப்பட்ட்ற காதல் ஒரு அழகிய காவியமாய் என் நெஞ்சில் எப்போதும் நிறைந்திருக்கிறது..
பாரதிக்கு வயது 9,அப்போது அவருக்கு 7 வயதிலான ஒரு சிறு பெண்ணின் நட்பு கிடைக்கிறது, அவளோடு அவர் ஆடி படி சோலைகளில் திரிகிறார், பிள்ளை பிராயத்திலே அவர் அவள் மீது மிகுந்த அன்பு பாராட்டுகிறார். தான் அவள் மீது கொண்ட காதல் தெய்வீகமானது என்கிறார் பாரதி. ஒரு நாள் அந்த பெண் தன் உள்ளங்கையில் இருக்கும் மை கொண்டு பாரதியின் நெற்றியில் திலகமிடுகிறாள் , அன்று திருவாதிரை திருநாள் . அவள் திலகமிட்டவுடன் பாரதி நினைவிழந்து மூர்சையாகிவிடுகிறார்..
" ஆதிரை திருநாளோன்றில் சங்கரன் ஆலயத்தில்ஒரு மண்டபம்தனில்
நான் சோதிமானோடு தன்ன்தநியனாய் சொற்க்களாடி இருப்ப ,
மற்றுஆங்கு அவள் பாதிபேசி மறைந்து பின் தோன்றி தன்
பங்கையர் கையில் மை கொணர்ந்தே , ஒரு சேதி -
நெற்றியில் போட்டு வைப்பேன் என்றாள்.
திலகம் இட்டனள் , சைகை அழிந்தேன் ..!! "
என்று தான் பிள்ளை தோழியாக வந்த கண்ணம்மாவை காட்டுகிறார் !!
பின்பு கண்ணம்மாவை எங்கு தேடியும் அவள் தென்பட வில்லை, அவளை தன் வாழ்நாளில் மீண்டும் ஒரு முறை பார்ப்போமோ என்று ஏங்கி தவிக்கிறார். அவளை தன் பாடல்கள் வழியாக தேடி திரிகிறார்.
கண்ணம்மாவின் வடிவத்தை அவர் வருணனை செய்கையில், அவள் புன்னகை ரோஜா மலரை ஒத்தது என்றும், விழி இந்திரா லோகத்து நீல மலர் என்றும , முகம் செந்தாமரை மலர் என்றும் உவமை படுத்துகிறார்.
மேலும் ,
"எங்கள் கண்ணம்மா எழில் மின்னலை நேர்க்கும் ;
எங்கள் கண்ணம்மா புருவங்கள் மதன்விற்கள்;
திங்களை மூடிய பாம்பினை போல
செறிகுழல் ;இவள் நாசி எட் பூ; "
எததகைய வருணை , கண்ணம்மாவை அழகின் இருப்பிடமாகவே காட்டுகிறார் பாரதி.
வறுமையில் வாடியிருந்த போதும் காதலில் மூழிகி ,கண்ணம்மாவை தன் இதய பீடதே எற்றிவைதிருந்தான் . அவள் அவர் ஞான கூடத்தில் ஏறி விளையாடும் ரதி ,வீடு பேற்றினை ஒத்த இன்பத்தை அளிக்கும் வித்தை , இவள் கண்ணன் திருமார்பில் கலந்த திருமகளோ ? என்று அவளை எண்ணி எண்ணி தித்திக்கிறார் .. கண்ணம்மா என்றே பெயர் சொல்லியே தனது துன்பங்கள் மறக்கிறான் .
"நீயென தின்னுயிர் கண்ணம்மா -எந்த
நேரமும் நிந்தனை போற்றுவேன் - துயர்
போயின போயின துன்பங்கள் நின்னை
பொன்னென கொண்ட பொழுதிலே - என்றன்
வாயினிலே அமுதூறுதே "
என்று அவள் பெயர் சொல்லிய் பசி ,தூக்கம் மறக்கிறான் ..
தனில் இருந்து கண்ணம்மாவை வேறு படுத்தாது தனில் ஒன்றாய் அவள் கலந்துவிட்டதாக உணர்கிறான்.காதலின் அழகே அந்த ஏகாந்த உணர்வில் தான் இருக்கிறது. தானும் அவளும் வேறு இன்று பிரித்துணர முடியாத பேரின்ப நிலை தான் காதல்.
அவள் தன் மரபு கூட்டிற்குள் போய் மறைகிறாள் . சாத்திரங்கள் என்று சொல்லி தனக்கு விலங்கிட்டு கொள்கிறாள் . பாரதி பேசுகிறான்
"சாத்திரம் பேசுகிறாய் - கண்ணம்மா ,
சாத்திரம் எதுக்கடி ? ஆத்திரம்
கொண்டவர்க்கே கண்ணம்மா
சாத்திரம் ஒன்டோடீ ?
மூத்தவர் சம்மதியில் வதுவை
முறைகள் பின்பு செய்வோம் ;
காத்திருப்பேனோடி ? - இது பார்
கன்னத்து முத்தமொன்று "
என்று கண்ணம்மாவின் முத்தம் ஒன்றிற்கு ஏங்குகிறார் !!
--இன்னும் கண்ணம்மாவின் காதல் தொடரும் ..!!
1 comment:
Nice commentary. I have read such thoughts which might have been flowing in Bharathi's mind. You really gave him the gift of a beloved which he richly deserves. Pl read my article on காற்று வெளியிடைக் கண்ணம்மா here:
http://periscope-narada.blogspot.com/2014/11/kannammavin-kadhal.html
Post a Comment