Thursday, March 18, 2010

மெல்லத் தமிழ் இனி...

       " தொன்று நிகழ்ந்தனைத்தும் உணர்த்திடு
         சூழ் கலை வாணர்களும் - இவள்
         என்று பிறந்தவள் என்று உணராத
         இயல்பின ளாம் எங்கள் தாய்"

என்று பாரதி தமிழ் தாயை வாழ்த்துகிறான். முதன் முதலில் தோன்றிய தமிழ் மொழியை இன்று யாரும் கண்டு கொள்ளாமல் இருப்பது முட்டாள்தனம் என்றே சொல்ல வேண்டும் . " நல்ல தோர் வீணை செய்து அதை புழுதியில் எரிந்து விட்டோம்".

            
                                   தமிழ் என்னும் சொல்லிற்கு இனிமை என்று பொருள் . பிறமொழிகளில் இல்லாத 'ழ' கர உச்சரிப்பு நம் மொழிக்கே உரிய சிறப்பு .தமிழ் மொழி பெரும்பாலும் மனிதனுக்கு வாழ்வியல் நெறிகளை சுட்டவும், இயற்கையையும் பெண்ணையும் வருணிக்க மட்டுமே பயன்படும் கருவியாகவும் இருக்கின்றது. தொன்மை மொழியாகிய தமிழில், இன்று பரவலாக பேசபெரும் அறிவியல் கூறுகள் தமிழில் இல்லை என்பது மிகவும் சாடதக்கதாகும்.


                               இசை, மொழியினை மக்களிடம் பரப்புவதற்கு ஒரு கருவியாய் செயல்பட்டது.முத்தமிழில் நடுவனதாய் திகழும் இசைக்கு இனிமை சேர்பது தமிழ்.
நாவுக்கரசர் இறைவனை பாடுகையில்,

"ஏழ் இசையாய் இசை பயனாய்" என்கிறார்.
நோய் தீர்க்கும் ராகங்களையும்,இயற்கையை இசைய வைக்கும் ராகங்களையும் மொழியில் அமைத்து பாடியவர்கள் தமிழர்கள்.
                              முற்காலத்தில் இருந்த யாழும், வீணையும் சொடிக்கி வாசிக்கபடுகின்ற கருவிகளாகும் . இக்கருவிகளில் "கமகம்" இடம் பெற முடியாது. வீணையை சொடுக்கி வாசிக்காமல் , விருடைகளின் மேல் விரல்களை வைத்து இழுத்து கொண்டே போவதால் கமகத்தை உண்டாக்க முடியும் . இந்த நுண்ணிய கருத்தை "

                 "மிக நல்ல வீணை தடவி"

என்ற சொற்களின் முலம் கோளறு பதிகத்தில் கமகத்தை முதன் முதலில் அறிவித்த பெருமை ஞானசம்மந்தரை  சாரும்.எனவே நாகரீக மோகத்தில் இருக்கும் இளளஞர்கள் நமது தமிழ் கீதங்களை செவிமடுக்க வேண்டும்.


                            மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே பிணியும் தோன்றியிருக்க வேண்டும். இன்று பெரும்பாலும் "அலோபதி" எனப்படும் மருத்துவமுறை பரவலாக உள்ளது .நோய்க்கான முளிகைகளையும், முறைகளையும் சொன்னவர்கள் சித்தர்கள்.பிணிக்கான காரணம் முன்று : கபம், வாயு,பித்தம். இவைபோலவே பிணிக்கான மருந்துகள் முன்று: சுக்கு, மிளகு, திபில்லி என்ற முன்றையும் குறிக்கின்றனர்.தமிழ் மருத்துவம் பக்க விளைவுகள் இல்லாத மருத்துவ முறையாகும். இவையாவும் பாட்டி வைத்திய முறையில் இன்றும் கிராமங்களில் கடை பிடிக்கபடுகின்றது. மேலும் நோய்தீர்க்கும் முறைகளான யோகா, முச்சு பயிற்சி , த்யானம் என்பன யாவும் நம் நாட்டில் தோன்றியவையே.

                           பூமியை நாயகமாக கொண்டு சூரிய, சந்திர கோள்கள் சுற்றி வருவதாக கருதினான் (Aristotle).
" உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு " என்று நக்கீரர் பாடுகிறார். பிற்காலத்தில் (Coperniccus, galileo ) போன்றவர்களே சூரிய நாயக கொள்கையை நிறுவினர் (Sun - Centered Theory).

" கோள் மின் சூழ்ந்த இளங்கதிர் ஞாயிறு" (சிருபானாட்ட்று படை)

" நாள் , கோள், திங்கள் , ஞாயிறு , கனையழல் ஐந்தொரு புனைந்த விளக்கம்" (பதிற்றுபத்து) என பண்டை தமிழ் சங்க புலவர் குமடூர் கண்ணனார் குரிபிடுவதில் சிறு புள்ளியாக தோன்றும் விண்மீன் (Star) , சற்றே பொலிவுடன் திகழும் கிரகம் (Planet) , சந்திரன், சூரியன் ஆகியவற்றை தொடர்ந்து கனையழல் என்ற சொல்லாட்சி விண்மீன் தொகுதியான உடுமண்டலத்தை (Galaxy) குறிக்கும். இன்றும் தமிழர்களால் கண்டறிய பட்ட பஞ்சாங்கத்தை  நாம் பயன்படுத்துகிறோம் .


                                "எண்ணும் எழுத்தும் கண்ணனென தகும்" (ஒவ்வை).
எண்களை மிகவும் போற்றியவர்கள் தமிழர்கள். பூஜியத்தை கண்டறிந்து சொன்னவர்கள் நம் நாட்டவர்.

" ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்

  நாழி முகவாது நால்நாழி" (மூதுரை) .

இவ்வரிகளை நோக்கினால் எவ்வளவு தான் அமுக்கி முகர்ந்தாலும் ஒருபாத்திரத்தின் கொள்ளளவிற்கு மேல் அது கொள்ளாது என்னும் அறிவியல் உண்மையை புலப்படுத்தும். எண்களை  குறிக்க பெரிய கெட்டி லக்கம் , பெரிய நெல்லி லக்கம் , கீழ்வாய் இலக்கம் , பெருகுழி , சிறுகுழி என்பன பயன்படுத்தப்பட்டன.

                               
                                   " நீர் இன்றி அமையாது உலகம்" (குறள்)
நாட்டு செல்வங்களில் முக்கிய பங்கு நீருக்கு உண்டு .நீர் ஒரு பொருளாதார தகுதி உடைய பொருளாக உருவாகி விட்ட போதிலும் , இன்னும் அது ஏற்றுமதி இறக்குமதி பொருளாக வில்லை. ஒரே நாட்டில் கூட ஒரு நதியின் படுகையில்ருந்து உபரி நீர் இன்னொரு நதி படுகையின் தேவையை தீர்க்க திருப்பி விடபடுவதில்லை."படுகை விட்டு படுகை நீர் மாற்றம்" ( Inter- basin transfer) இன்னும் ஒரு பரவலான கொள்கையாக்க படவில்லை என்றாலும் நீர்வளம் ஒரு தேசிய சொத்தாக வேண்டும் என்பதை

"வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்

 மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம்"

என்று அன்றே சொன்னான் பாரதி.
மேலும் தொழில் குறித்து பாடுகையில்

"காசி நகர் புலவர் பேசும் உரைதான்

காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்" என்றார்.


                                        அண்மையில் கடல் தாயின் கொந்தளிப்பால் ஏற்பட்ட சுனாமி பேரழிவு நம்மால் மறக்க முடியாத ஒன்று. இதனை பற்றியும் தமிழ் வல்லுனர்கள் குறிப்பிட்டு உள்ளார்கள். அமரர் கல்கி இன் பொன்னியின் செல்வன் என்னும் புதினத்தில் சுழல் கட்ட்ரிக்கான அறிகுறி , அவை எப்படி பேரலைகளாக எழும் என்பன போன்ற குறிப்புகள் உள்ளன. இவ்வாறு சுழி காற்று வீசும் பொது பாய் மரங்களை அவிழ்த்து விட வேண்டும் என்கிறார். மின்னலடிக்கும் பொழுதினை கூறுகையில்
"மின்னல் அடிவானத்தில் இருளை கிழித்து கொண்டு புறப்பட்டது.அதுமேலும் நீண்டு கப்பும் கிளையும் விட்டு படர்ந்தது."இதில் கப்பும் கிளையும் விட்டு படரும் மின்னலை நாம் (Leader stroke) என்று ஆங்கிலத்தில் சொல்கிறோம்.


                              இவ்வாறு எந்த துறையை தொட்டாலும் தமிழனின் பாதசுவடே உள்ளது. இப்படி இருக்க நாம் ஆங்கில வழியில் கல்வி படித்து கொண்டு இருக்கிறோம் . இது இயற்க்கைக்கு மாறாக நாம் நடத்தும் போராட்டம். எத்தனை தான் முகபூசுக்கள் பூசினாலும் முகம் இறைவன் படைத்த படைப்பிலே தான் அழகாக அமையும்.

                                 "Rain Rain go away , come again another day"

என்ற ஆங்கில பாட்டு தெரிந்திருக்கிறது,ஆனால் அதே மழையை அது விழும் அழகோடு அமைத்து பாடிய பாரதியின் பாடலை தெரியவில்லை.

" திக்குகள் எட்டும் சிதறி - தக்க
தாம் தரிகிட தீம் தரிகிட தீம் தரிகிட
பக்க மலைகள் உடைவெள்ளம் பாயுது - தாம் தரிகிட
தக்க ததிங்க்ட தித்தோம் - அண்டம்
சாயுது சாயுது - பேய் கொண்டு
தக்கை அடிக்குது காற்று - தக்க
தாம் தரிகிட தீம் தரிகிட தீம் தரிகிட "


இந்த பாடலை இனியாவது பள்ளிகளில் கற்று தர வேண்டும்.

இளைஞர்கள் பிற மொழி நூல்களை தமிழில் மொழிபெயர்க்கலாம் . நல்லது செய்ய துன்பம் வரும் , துன்பங்களை தோல்வியுற செய்து நம் மொழியின் மேன்மையை உலகுக்கு உணர்த்துவோம்.

"பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியிற் மொழி பெயர்க்க வேண்டும்
இறவாத புகழ் உடைய புது நூல்கள்
தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்."

என்ற பாரதியின் கனவினை மெய்பிக்க வேண்டும்.

"உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின்
வாக்கினிலே ஒளி உண்டாகும்
வெள்ளத்தின் பெருக்கை போல் கலை பெருக்கும்
கவி பெருக்கும் மேவுமாயின்
பள்ளத்தில் வீழிந்திருக்கும் குருடரெல்லாம்
விழி பெற்று பதவி உயர்வு கொள்வார்
தெள்ளுற்ற தமிழ் அமுதின் சுவை கண்டார்
இங்கு அமரர்சிறப்பு கண்டார் "

எனவே தமிழின் , தமிழனின் பெருமையினை உலகம் உணர செய்வோமாக!

வேற்றுமை உருபு நீ !!

சொற்களின் இருதியில் மெல்லியதாக ஒட்டி கொண்டிருக்கும்
வேற்றுமை உருபு நீ !!
உன்னை இழந்தால் இந்த வாக்கியம் பொருளற்று போகும் !!

பத்மாவின் பாதங்கள் !!!



மார்கழி  மாதம்  எல்லா வித பசி உள்ளவர்களுக்கும் விருந்தளிக்கும் மாதம்.உணவின் பசி கொண்டவர்க்கு பார்த்தசாரதி கோயில் சக்கரை பொங்கல்.
பக்தி ரசம் வேண்டுவோர்க்கு கோயில் தோறும் திருவிழா.ஆனால் நான் சொல்ல போவது கலை பசியும் அந்தன் ருசியும் அறிந்தவர்க்கு.




                 டாக்டர் . பத்மா சுப்ரமணியத்தின் "பரிபாடல் முதல் பாரதி வரை" என்ற நாடிய நிகழ்ச்சியை அண்மையில் கண்டு களித்தேன்.

பரிபாடல் பாடல் ஒன்றில் நிகழ்ச்சி தொண்டகியது. வண்டு ஊதும் அழகும் , தும்பி பறக்கும் அழகும் , அருவி பாயும் அழகும் அவர் அபிநயத்தில் மிக சிறப்புற அமைந்தது .

திருக்குறளில் அடுத்த காட்சி. குடும்ப தலைவி தலைவனின் கடமைகள் என்ற பொருளில் அமைந்த ௧0 (பத்து) குறட்பாக்களை காயத்ரி கண்ணன் பாட்டிசைக்க , பத்மா ஆடிய அழகை காண கண் கோடி வேண்டும்,. குழல் இனிது யாழ் இனிது என்ற குறளில் ,குழல் இனிது யாழ் இனிது பத்மாவின் நடனம் இனிது என்று சேர்க்க சொல்ல வேண்டும். யான் நோக்கிற் என்னை என்ற குறளிற்கு ,காதல் ரசம் சொட்ட்ட சொட்ட அதில் நான் நனைத்தேன்.

மாயமோ மருட்கை என்ற பாடலில் நாராயணனின் அவதாரங்களை மிக அற்புதமாக படம் பிடித்தார். கண்ணன் மண்ணை உண்ட பின் வாய் திறந்து உலகம் முழுவதையும் காட்டியதையும் சொல்ல வார்த்தைகள் குறைவு.மேலும் நரஷிம , வாமன அவதாரங்கள் அதி அற்புதம் .

சுந்தரரின் திருமணமும் , அவரின் திருமணத்தில் ஈசன் வந்து ஆவணத்தை காட்டி, நீயும் உன் வம்சமும் என் அடிமைகள் என்ற கதையை மிக சிறப்பாக தன் முகத்தில் காட்டினர்.முதியவராக வந்த ஈசன் போல பத்மா நடந்தது, நெஞ்சை விட்டு அகலாது.

கற்பூரம் நாறுமோ கமலா பூ நாறுமோ என்ற நாச்சியார் திருமொழி , காயத்ரி கண்ணனின் வாய் மொழியில் மிக இனித்தது. படி படியாக கம்பன் காலத்திற்கு வந்தார்கள் , சீதை சபைக்கு வந்த அழகை வருணித்தமைக்கு கம்பனை புகழ்வதா ? சீதையாக தெரிந்த பத்மாவை புகழ்வதா தெரியவில்லை .

நாயன்மார்களுள் ஒருவரான நந்தனாரை பாடுகையில் சிறிது கிராமிய இசையும் சேர்ந்து , விழா மிக சிறப்பாக மெருகேறியது . மலை போல ஒரு மாடு வழி மறைக்குதே என்று முந்தைய கட்சேரியில் அருணா சாய்ராம் அவர்கள் பாடியதை அப்படியே நேரில் கண்டது போல் இருந்தது.

இறுதியாக பாரதியின் காலத்திற்கு வந்து , "பாரத தேசம் என்று பெயர் சொல்லுவார் " என்ற பாடலில் உள்ளத்தில் இந்தியாவின் பெருமை பெருக்கெடுத்து.கங்கை நதி புரத்தின் கோதுமை என்ற வரிக்கு பத்மா கோதுமை பெசைந்தது , ரசனையின் உச்ச கட்டம் .

நட்டுவாங்கம் பாடிய திருமதி மதுவந்தி அருண் , காயத்ரி கண்ணன், வீணை மீட்டி ,பாடலும் இசைத்த பத்மாவின் உறவினர் கண்ணன் அதனை பெரும் மிக பெரிய பலம் .மொத்தத்தில் அது ஒரு அழகிய பூச்சரம் . விவரிக்க முற்பட்டாலும் கடலில் ஒரு துளியை பற்றி மட்டும் பேசுவது போலாகும்.

மார்கழி ராகம்

கர்நாடக சங்கீத உலகம், ஸ்ரீ. ஜெயேந்திரன் அவர்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டுள்ளது.முதன் முறையாக கர்நாடக சங்கீதத்தை உலக அரங்கிற்கு கொண்டு சென்று இருக்கிறார்.













தியேட்டரில் அமர்ந்து கட்சேரி கேட்கலாம் என்பது மிக மகிழ்ச்சியான விஷயம்.இரண்டு மணி நேரம் போவதே தெரியவில்லை. கட்சேரியில் பாடுபவரின் முகம் கூட சரியாக தெரியாது , ஆனால் பாம்பே ஜெயஸ்ரீ , T. M கிருஷ்ணனின் ஒவ்வொரு அசைவும் தெள்ள தெளிவாக தெரிகிறது.


மாயாமாளவ கௌள ராகத்தில் ஜெயஸ்ரீ ஆரம்பிக்கிறார்.தொடர்ந்து நீலாம்பரி , ரிடிகோவ்ள என்று பாட, அம்பா ஜனனி நின்னுவின என்ற பாடலை ஜெயஸ்ரீ ஆரம்பித்து கிருஷ்ணா முடித்து வைக்கிறார்.


கிருஷ்ணனின் கமாஸ் ராகம் அத்துணை அழகு, வயோலின் ஓடு சேர்ந்த அவரது குரல் சங்கீதம் தெரியாதவர்களை கூட தாளமிட வைக்கும். அதி அற்புதம் என்று மட்டுமே சொல்ல முடியும். அவர் இடையில் சொல்லும் ஆஹா, சபாஷ் கூட ராகத்தோடு பிணைந்திருக்கிறது.

தம்பூரா சுருதி யோடு மட்டும் பாடிய பாடலும் மிக சிறப்பு. இரண்டு சங்கீத மேதைகளுமே போட்டி போட்டு பாடி இருக்கிறார்கள் . இறுதியாக பாரதியார் பாடல் பாடியமைக்கு மிக்க நன்றி.

இந்த மிக பெரிய படைபிற்கு Audiography செய்த ஸ்ரீதர் அண்மையில் மறைந்தார் என்பது வருத்தம். நிச்சியம் அவர் இசையாக நம்மோடு வாழ்வார் P C. ஸ்ரீராம் வழக்கம் போல் அழகாக படம் பிடித்திருக்கிறார்.

மக்கள் நிச்சயம் இது போன்ற நல்ல திரை படங்களுக்கு ஆதரவு தர வேண்டும். சராசரி படங்களை கொஞ்சம்ஓரம் கட்டி விட்டு , நல்ல படங்களை வரவேற்க பழக வேண்டும்.

கடைசி பாடல் தவிர மற்ற எல்லாம் தெலுங்கு கீர்த்தனைகள் என்பது மட்டும் சிறிய உறுத்தல். கொஞ்சம் தமிழ் கீர்தனைகளுக்கும் இடமளிக்கலாமே.

மார்கழி ராகம் , சங்கீத பிரியர்களுக்கு இன்னும் ஒரு வர பிரசாதம்.ரசிகர்களின் உற்சாக தாளத்துடன் மார்கழி ராகம் பிரவாகம் எடுக்கட்டும்.

Wednesday, March 17, 2010

பாரதியின் காதல் !!

இந்த உலகத்து ஒவ்வொரு உயிர்களும் தான் வாழ்நாளில் அனுபவிக்கும் ஒரு உன்னதமான உணர்வு காதல்.இதைபற்றி பேசாதவர்கள்,பாடாதவர்கள் எந்த லோகத்திலும் கிடையாது. சாதாரண மனிதனையும் கவிஞனாய் மற்றும் வல்லம்மை கொண்டது காதல்.

ஒவ்வொரு உணர்விற்கும் இலக்கணம் வகுத்து இப்படி தன வாழவேண்டும் என்று சொன்னவர்கள் தமிழர்கள்.தொல்காப்பியம் தொடங்கி,சங்க இலக்கிய தலைவன் தலைவி காதல் கொள்ளும் அழகை அகநானூற்று பாடல்களை வடித்து ,இன்றைய புது கவிதைகள் வரை , காதல் பற்றி பறைசாற்றதவர்களே இல்லை எனலாம் .. இனினும் என்னுயிர் தோழமை பாரதியினின் ஒப்பட்ட்ற காதல் ஒரு அழகிய காவியமாய் என் நெஞ்சில் எப்போதும் நிறைந்திருக்கிறது..

பாரதிக்கு வயது 9,அப்போது அவருக்கு 7 வயதிலான ஒரு சிறு பெண்ணின் நட்பு கிடைக்கிறது, அவளோடு அவர் ஆடி படி சோலைகளில் திரிகிறார், பிள்ளை பிராயத்திலே அவர் அவள் மீது மிகுந்த அன்பு பாராட்டுகிறார். தான் அவள் மீது கொண்ட காதல் தெய்வீகமானது என்கிறார் பாரதி. ஒரு நாள் அந்த பெண் தன் உள்ளங்கையில் இருக்கும் மை கொண்டு பாரதியின் நெற்றியில் திலகமிடுகிறாள் , அன்று திருவாதிரை திருநாள் . அவள் திலகமிட்டவுடன் பாரதி நினைவிழந்து மூர்சையாகிவிடுகிறார்..

  " ஆதிரை திருநாளோன்றில் சங்கரன் ஆலயத்தில்ஒரு மண்டபம்தனில்

நான் சோதிமானோடு தன்ன்தநியனாய் சொற்க்களாடி இருப்ப ,
மற்றுஆங்கு அவள் பாதிபேசி மறைந்து பின் தோன்றி தன்
பங்கையர் கையில் மை கொணர்ந்தே , ஒரு சேதி -
நெற்றியில் போட்டு வைப்பேன் என்றாள்.
திலகம் இட்டனள் , சைகை அழிந்தேன் ..!! "


என்று தான் பிள்ளை தோழியாக வந்த கண்ணம்மாவை காட்டுகிறார் !!

பின்பு கண்ணம்மாவை எங்கு தேடியும் அவள் தென்பட வில்லை, அவளை தன் வாழ்நாளில் மீண்டும் ஒரு முறை பார்ப்போமோ என்று ஏங்கி தவிக்கிறார். அவளை தன் பாடல்கள் வழியாக தேடி திரிகிறார்.

              கண்ணம்மாவின் வடிவத்தை அவர் வருணனை செய்கையில், அவள் புன்னகை ரோஜா மலரை ஒத்தது என்றும், விழி இந்திரா லோகத்து நீல மலர் என்றும , முகம் செந்தாமரை மலர் என்றும் உவமை படுத்துகிறார்.
மேலும் ,

"எங்கள் கண்ணம்மா எழில் மின்னலை நேர்க்கும் ;

எங்கள் கண்ணம்மா புருவங்கள் மதன்விற்கள்;
திங்களை மூடிய பாம்பினை போல
செறிகுழல் ;இவள் நாசி எட் பூ; "

எததகைய வருணை , கண்ணம்மாவை அழகின் இருப்பிடமாகவே காட்டுகிறார் பாரதி.


       வறுமையில் வாடியிருந்த போதும் காதலில் மூழிகி ,கண்ணம்மாவை தன் இதய பீடதே எற்றிவைதிருந்தான் . அவள் அவர் ஞான கூடத்தில் ஏறி விளையாடும் ரதி ,வீடு பேற்றினை ஒத்த இன்பத்தை அளிக்கும் வித்தை , இவள் கண்ணன் திருமார்பில் கலந்த திருமகளோ ? என்று அவளை எண்ணி எண்ணி தித்திக்கிறார் .. கண்ணம்மா என்றே பெயர் சொல்லியே தனது துன்பங்கள் மறக்கிறான் .

"நீயென தின்னுயிர் கண்ணம்மா -எந்த

நேரமும் நிந்தனை போற்றுவேன் - துயர்

போயின போயின துன்பங்கள் நின்னை

பொன்னென கொண்ட பொழுதிலே - என்றன்

வாயினிலே அமுதூறுதே "

என்று அவள் பெயர் சொல்லிய் பசி ,தூக்கம் மறக்கிறான் ..

        தனில் இருந்து கண்ணம்மாவை வேறு படுத்தாது தனில் ஒன்றாய் அவள் கலந்துவிட்டதாக உணர்கிறான்.காதலின் அழகே அந்த ஏகாந்த உணர்வில் தான் இருக்கிறது. தானும் அவளும் வேறு இன்று பிரித்துணர முடியாத பேரின்ப நிலை தான் காதல்.

        அவள் தன் மரபு கூட்டிற்குள் போய் மறைகிறாள் . சாத்திரங்கள் என்று சொல்லி தனக்கு விலங்கிட்டு கொள்கிறாள் . பாரதி பேசுகிறான்

"சாத்திரம் பேசுகிறாய் - கண்ணம்மா ,
சாத்திரம் எதுக்கடி ? ஆத்திரம்
கொண்டவர்க்கே கண்ணம்மா
சாத்திரம் ஒன்டோடீ ?
மூத்தவர் சம்மதியில் வதுவை
முறைகள் பின்பு செய்வோம் ;
காத்திருப்பேனோடி ? - இது பார்
கன்னத்து முத்தமொன்று "

என்று கண்ணம்மாவின் முத்தம் ஒன்றிற்கு ஏங்குகிறார் !!

--இன்னும் கண்ணம்மாவின் காதல் தொடரும் ..!!

Sunday, March 14, 2010

அம்புலி என்னும் அழகி !!



               தமிழர் வாழ்வோடு இயைந்தது இயற்கை. முதலில் தோன்றிய மனித குலம் இயற்கைகை கடவுளாக வழிபட தொடங்கியது. தமிழன் வழிபாட்டுடன் நின்று விடாமல் தனது கற்பனையை சேர்த்து இலக்கியங்கள் படைக்க தொடங்கினான். இலக்கியங்கள் வெறும் கற்பனை கதைகளாக இல்லாமல், அதன் மூலம் வாழ்வியல் நெறிகளையும்,தனது வாழ்க்கை முறைகளையும் பதிவு செய்தான். இயற்கையை தமிழர்களை காட்டிலும் வேறு யாரும் இத்துணை அழகாக பதிவு செய்திருக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை.

                 இயற்க்கை வருணனைகளில் முதலிடம் வகிப்பது நிலா. நிலவின் அழகை இலக்கியத்தில் இப்படி கையாண்டு இருக்கிறார்கள் என்ற சிந்தனையின் விளைவே இந்த கட்டுரை.
 
               நிலவை இறைவனாக பாவித்த இந்து மதத்தினர் நவகிரகங்களுக்குள் ஒன்றென சேர்த்தார்கள். நிலவின் ஒளி - கருணை,காதல்,அமைதி, கற்பனை ஆகியவற்றின் சின்னமாக கருதப்பட்டது. எனவே தான் கருணை ததும்பும் இறைவனின் திருமுகத்தை நிலவிற்கு ஒப்பிட்டார்கள்.சிவபெருமான் திங்களை தன்முடி மீது சொடிகொண்டிருபதை ஞானசம்மந்தர்,

      " தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்

        காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன் "

       (முதல் திருமுறை )

என்கிறார்.

             சக்தியின் நுதல் பிறை மதி போன்று உள்ளதை " மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து " என்று திருநீற்று பதிகத்தில் அப்பர் பெருமான் பாடுகிறார். பாவை நோன்பு நோற்கும் ஆண்டாள் மதி நிறைந்த நன்னாளில் திருமாலை வழிபட தன தோழிகளை அழைக்கிறாள்.

          நிலவின் ஒளியை மையமாக வைத்து உருவாக்க பட்ட ஒரு பக்தி இலக்கியம் அபிராமி அந்தாதி; திருக்கடையூர் அபிராமியின் முக ஒளியில் தன் நினைவிழந்த பட்டர் அம்மாவாசை நாளை பௌர்ணமி என்று அரசனிடம் சொல்ல , அன்று இரவு நிலவு தென்பட வில்லையெனில் பட்டருக்கு மரண தண்டனை என்று அறிவிதித்தான். அபிராமியின் அருள் பெற்ற பட்டர் அந்தாதி பாட, அபிராமி தனது காது குண்டலங்களை எரிந்து நிலவினை தோன்ற செய்தாள்.

          "அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி, அரு மறைகள்

            பழகிச் சிவந்த பதாம்புயத்தாள், பனி மா மதியின்

            குழவித் திருமுடிக் கோமளயாமளைக் கொம்பு இருக்க--

            இழவுற்று நின்ற நெஞ்சே.-இரங்கேல், உனக்கு என் குறையே?"

           மதி , சந்திரன் , அம்புலி ,திங்கள் என்று பலவாராக அழைக்கப்படும் நிலவு கவிஞர்களின் சுரங்கம் என்றே சொல்ல வேண்டும். சிலப்பதிகாரத்தில் " திங்களை போற்றுதும் " என்று மங்கள வாழ்த்து காதையில் பாடுகிறார்.

பாரதியார் காணி நிலம் வேண்டுகையில் ,

பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம் பக்கத்திலே வேணும் - நல்ல

முத்துச் சுடர்போலே - நிலாவொளி

முன்பு வரவேணும், அங்கு

கத்துங் குயிலோசை - சற்றே வந்து

காதிற் படவேணும், - என்றன்

சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்

தென்றல் வரவேணும்.

என்று நிலவினை அழைக்கிறார்.

        அழகின் வருணனைக்காக மட்டும் அல்லாது, நிலவில் மனிதன் கால் பதிப்பான் என்பதை " கன்னியராகி நிலவினில் ஆடி களித்ததும் இந்நாடே" என்று அன்றே கனவு கண்ட ார். திருமகளை பாடுகையில்
" நிலவு செய்யும் முகமும் " என திருமகளின் முகத்தை நிலவிற்கு ஒப்பிடுகிறார்.

நிலவினை நட்புக்கு உவமையக்கிய வள்ளுவர்
" நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதி

பின்னீர பேதையர் நட்பு"

நல்லவர் நட்பு வளர்பிறை போல வளர்ந்து வரும் என்றும் , தீயவர் நட்பு தேய்பிறை போல தேய்ந்து விடும் என்று பாடுகிறார்.

பாரதிதாசன் நிலவை காதலியின் முகமாக பாவித்து ,

" நீல வான் ஆடைக்குள் உடல் மறைத்து

நிலவென்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை ,

கோலமுழுதும் காட்டிவிட்டால் காதற் கொள்ளைஇலே

இவ்வுலகம் சாமோ ? "

இப்பாடலில் நிலா தன் உடலை மேகம் என்னும் திரைக்குள் மறைத்து கொண்டு தன் முகத்தை மட்டும் காட்டுகிறது . அது தன் உடல் முழுவதையும் காட்டிவிட்டால் அந்த அழகிலே இந்த உலகமே மயங்கி போகும் என்கிறார்.

மேலும் தன் அழகின் சிரிப்பில்,


" பொன்னுடை களைந்து, வேறே புதிதான முத்து சேலை

தன்இடை அணிந்தால் அந்த தங்ககடற் பெண்ணாள், தம்பி

என்னென்று கேள்; அதோபார் எழில் நிலா ஒளிகொட்டிற்று

மன்னியே வாழி என்று கடலினை வாழ்த்தாய் தம்பி!!

ஞாயிறு மறைந்து நிலா தோன்றும் அழகை, இந்த பாடல் எத்துனை அழகாக சொல்கிறது !!
              சங்க கால கவிஞன் ஒருவன் நிலவினை வெள்ளை அப்பம் என்றும் , நீல வானத்தில் நீந்துகின்ற ஓடம் என்றும் பாடிஇருக்கிறார். காதலனை பிரிந்த தலைவி நிலவை தூது விடுவாள். நிலவு தேய்வதை போல் தானும் தலைவனை நினைத்து மெலிவதாக சங்ககால பாடல்கள் சுட்டுகிறது.
மீனாட்சி சுந்தரனார் தமிழ் தாயின் நெற்றியை " தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே" நிலவிற்கு ஒப்பிடுகிறார்.

              இப்படி நிலவு தமிழரின் இலக்கியத்தில் மட்டும் அல்லது அன்றாட வாழ்க்கையிலும் ஒரு அங்கமாக இருக்கிறது . தாய் தன் குழந்தைக்கு நிலவினை காண்பித்து சோறூட்டும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகின்றது. பிள்ளை தமிழ் இலக்கியத்தில் குழந்தையின் வளர்ச்சி பருவத்தில் ஒன்றாக "அம்புலி பருவம் " கருதபடுகிறது அரண்மனைகளில் நிலா முற்றம் வைத்து கட்டுவதும் அங்கே தலைவி தலைவனுடன் தனிமையில் பழகுவதையும் இலக்கியங்கள் காட்டுகின்றது.

           தினசரி தேடல்களில் தன்னை தொலைத்து விட்டு ஓடி கொண்டிருக்கும் மனிதன், கொஞ்சம் இயற்கையை நுகரவும் ,இலக்கியத்தில் உள்ள சுரங்கத்தை உணரவும் வேண்டும் .ஒரு முறையேனும் இரவில் வானத்தை பார்த்து கொஞ்சம் ரசிக்கவும் கற்று கொள்ளலாமே !!