நீ திட்டிஇருக்கிறாய் - நான் அழுதிருக்கிறேன் ;
மறு நொடி, கேட்டது தருவாய் - உடனே சிரிப்பேன்..
உன் உணவினை குறை சொன்னேன், தூக்கி எறிந்தேன் ;
உடனே வேறு சமைப்பாய், பசி ஆறினேன்.
நான் படிப்பேன், நீ கண்விழிப்பாய் ,
எட்டி உதைத்தேன் , கட்டி புரண்டேன் ,
ஆனாலும் உன் முந்தானை பிடித்தே தூங்கி இருக்கிறேன்..
அப்போது மட்டுமே நிம்மதியாய் நான் உறங்கி இருக்கிறேன் ..
திரும்பி பார்த்தால் , உன்னோடு மட்டுமே நான் உண்மையாய் வாழ்ந்திருக்கிறேன் ..
என் முதல் , கடைசி காதல் இருண்டுமே நீ மட்டும் தான் என்று இன்று உணர்கிறேன் ..
அருகில் இருந்தாய் அருமை புரியவில்லை. , பெருமை உணர்ந்தேன் அருகில் நீ இல்லை..
எங்கோ இருக்கிறாய் நீ...
என் உயிர் தாயே என்றும் நீ வாழி !
No comments:
Post a Comment