மக்கள் இன்பம் அடைவதற்கு பல வழிகள் இருப்பினும் பொன்னாலும், பொருளாலும் பெரும் இன்பத்தை காட்டிலும் இலக்கிய இன்பம் தன்னிகரற்றது .பழந்தமிழர் மிகுந்த ரசனையோடு வாழ்ந்தார்கள் என்பதற்கு அவர்கள் நமக்கு அளித்த இலக்கியமே சாட்சியம். அவர்கள் இயற்கையோடு இணைந்த இயல்பான வாழ்வை வாழ்ந்திருக்க வேண்டும். இயற்கையை ரசித்ததோடு அன்றி,அவற்றை பாதுகாக்கும் குறிப்புகளை இலக்கிய நூல்கள் தோறும் காண முடிகிறது. சங்க இலக்கியத்தில் ,
நீர்நிறைந்த ஆறுகளையும்,நிழல் அமைந்த சோலைகளையும்,தண்ணிலவையும் காண முடிகிறது.சங்க இலக்கியத்தில் தாவரங்கள்,செடிகொடிகள் பற்றிய பல்வேறு குறிப்புகள் காணப்படுகின்றன .
சூழ்நிலை,தட்பவெப்பம்,மழை ஆகியவற்றை கொண்டே நிலங்கள் பகுக்கப்பட்டன.இவ்வாறான நிலங்களில் மரம்,பூ முதலியவற்றின் பெயர்களை வைத்துதான் அகத்திணைகள் ஐந்தும் ,புறத்திணைகள் பன்னிரண்டும் பெயர் இடப்பட்டன.குறுஞ்சிப்பூ 12 ஆண்டிற்கு ஒருமுறை பூக்கும் என்று சங்க நூலில் கூறப்பட்டுள்ளது. அழகிய வெள்ளை முல்லை பூவினை கற்பிற்கும் ,பெண்களின் புன்னகைக்கும் உவமை ஆக்கினர். முல்லை கொடி படர , தான் ஏறிச்சென்ற தேரை அதற்கு தந்தான் பாரி.
சூழ்நிலை,தட்பவெப்பம்,மழை ஆகியவற்றை கொண்டே நிலங்கள் பகுக்கப்பட்டன.இவ்வாறான நிலங்களில் மரம்,பூ முதலியவற்றின் பெயர்களை வைத்துதான் அகத்திணைகள் ஐந்தும் ,புறத்திணைகள் பன்னிரண்டும் பெயர் இடப்பட்டன.குறுஞ்சிப்பூ 12 ஆண்டிற்கு ஒருமுறை பூக்கும் என்று சங்க நூலில் கூறப்பட்டுள்ளது. அழகிய வெள்ளை முல்லை பூவினை கற்பிற்கும் ,பெண்களின் புன்னகைக்கும் உவமை ஆக்கினர். முல்லை கொடி படர , தான் ஏறிச்சென்ற தேரை அதற்கு தந்தான் பாரி.
"
சிறுவீ முல்லைக்கு பெருந்தேர் நல்கிய
பரம்பிற் கோமான் பாரி "
என்ற வரிகள் செடிகொடிகளுக்கு அளித்த உயரிய இடம் புலன் ஆகிறது.
மேலும் பழங்காலம் தொட்டே மா,பலா ,வாழை ஆகியவற்றை முக்கனிகளாக சேர்த்து அத்தகைய விருந்தை அரசர்க்குரிய விருந்தாக கருதி வந்தனர்.மருதம்,கொங்கு,வேங்கை , மூங்கில் போன்ற மரங்களை வைத்து பறை போன்ற கருவிகள் செய்தனர்.மூங்கில் மரத்தினை பெண்களின் தோளுக்கு உவமித்து " ஆடுமை புரையும் வனப்பிற் பணைத்தோள் பேரமர்க் கன்னி " என்று குறுந்தொகை கூறுகிறது. கபிலர் 99 பூக்களை குறுஞ்சி நிலத்தில் இருப்பதாக குருஞ்சிப்பட்டில் குறிக்கிறார்.
"வள் இதழ்
ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்
தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங்கொடு வேரி, தேமா, மணிச்சிகை,
உரிது நாறு அவிழ்தொத்து உந்தூழ், கூவிளம்,
எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்
வடவனம், வாகை, வான் பூங் குடசம்,
எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,
பயினி, வானி, பல்லிணர்க் குரவம்,
பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா,
விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,
குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி,
குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,
போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,
செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்,
கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்
தில்லை, பாலை, கல்இவர் முல்லை,
குல்லை, பிடவம், சிறுமாரோடம்,
வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்
தாழை, தளவம், முள் தாள் தாமரை
ஞாழல், மௌவல், நறுந்தண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங்குரலி
கோடல், கைதை, கொங்கு முதிர் நறுவழை,
காஞ்சி, மணிக்குலைக் கள் கமழ் நெய்தல்,
பாங்கர், மராஅம், பல்பூந் தணக்கம்,
ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,
அடும்பு, அமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை,
பகன்றை, பலாசம், பல்பூம் பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்து வாரம்,
தும்பை, துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி,
நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
பாரம், பீரம், பைங்குருக்கத்தி,
ஆரம், காழ்வை, கடிஇரும் புன்னை,
நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,
மாஇருங் குருந்தும், வேங்கையும் பிறவும்
அரக்கு விரிந்தன்ன பரு ஏர் அம் புழகுடன்
மால் அங்கு உடைய மலி வனம் மறுகி
வான்கண் கழீஇய அகல் அறைக் குவைஇ" .
ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்
தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங்கொடு வேரி, தேமா, மணிச்சிகை,
உரிது நாறு அவிழ்தொத்து உந்தூழ், கூவிளம்,
எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்
வடவனம், வாகை, வான் பூங் குடசம்,
எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,
பயினி, வானி, பல்லிணர்க் குரவம்,
பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா,
விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,
குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி,
குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,
போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,
செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்,
கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்
தில்லை, பாலை, கல்இவர் முல்லை,
குல்லை, பிடவம், சிறுமாரோடம்,
வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்
தாழை, தளவம், முள் தாள் தாமரை
ஞாழல், மௌவல், நறுந்தண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங்குரலி
கோடல், கைதை, கொங்கு முதிர் நறுவழை,
காஞ்சி, மணிக்குலைக் கள் கமழ் நெய்தல்,
பாங்கர், மராஅம், பல்பூந் தணக்கம்,
ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,
அடும்பு, அமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை,
பகன்றை, பலாசம், பல்பூம் பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்து வாரம்,
தும்பை, துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி,
நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
பாரம், பீரம், பைங்குருக்கத்தி,
ஆரம், காழ்வை, கடிஇரும் புன்னை,
நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,
மாஇருங் குருந்தும், வேங்கையும் பிறவும்
அரக்கு விரிந்தன்ன பரு ஏர் அம் புழகுடன்
மால் அங்கு உடைய மலி வனம் மறுகி
வான்கண் கழீஇய அகல் அறைக் குவைஇ" .
வேங்கை மலர்கள் குறுஞ்சி நிலத்திற்குரிய அழகிய மலர்கள்.அது பூக்கும் பருவம் திருமணம் நிகழ்தற்குரிய அழகிய மலர்கள். அது பூக்கும் பருவம் திருமணம் நிகழ்த்திற்குரிய பருவமாக கருதப்பட்டது. இயற்கையுடன் அளவளாவிய தமிழ் மக்கள் வேங்கை மரத்தின் நிழலில் திருமணங்களை நடத்தி வந்தனர். புன்னை,இலுப்பை வேம்பு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்பட்டது. பாலை நிலத்தில் காணப்படும் முருக்கம் என்ற மரம் சங்க இலக்கியத்தில் பாடப்பட்டுள்ளது.ஒரே சிவப்பாக இம்மரம் பூத்து குலுங்கும் பொது காடு பற்றி எரிவது போல் தோன்றுதலால் இம்மரம் "காட்டுத்தீ " என்று பெயர்ப்பெற்றது.இதன் சிவந்து வளைந்த பூவை கண்ட காளிதாசர் சிவந்த கிளி மூக்கிற்கு ஒப்பிட்டுள்ளார்.அகநாநூற்று பாடல் இதன் அரும்பு உதிரம் தோய்ந்த புலிநகம் போல உள்ளது என்பதனை
"
செம்பூ முருக்கி னனன்னார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்து "
என்ற குறுந்தொகை பாடலில் காணலாம்.
"உத்தமர்தாம் ஈயுமிடத்து ஓங்குபனை போல்வரே
மதிமர்தாந தென்குதனை மானுவரே முத்தலரும்
ஆங்கமுகு போல்வார்தாம் ரவர்களே
தேங்கதலி யும்போல்வார் தேர்ந்து "
என்ற பாடலில், நீர் சிறிதளவே எடுத்தாலும் மிகுந்த பயன் அளிக்கும் பனை மரத்தை மேலோர்க்கும், எடுக்கும் நீரளவு பயன் தரும் தென்னையை மத்திமோர்க்கும் ,கொடுக்கும் பலனை காட்டிலும் மிகுதியாக நீரை எடுத்துக் கொள்ளும் கமுகு மரத்தை கீழோருக்கும் உவமை ஆக்கிப்பாடியுள்ளார் .
சங்க இலக்கியத்தில் மரங்கள் மட்டும் இன்றி செடி கொடிகளையும் பலவராக பாடியுள்ளனர். பொதுவாக கொடியை பெண்களின் சிற்றிடைக்கு உவமை கூறுவார்.காந்தள் மலரை உற்று நோக்கிய கவிஞர், அதன் இதழ்கள் குவிந்து இருப்பது இறைவழிபாடு செய்யும் மகளிரின் குவிந்த கைப்போல் கவின் செய்கிறது என்கிறார்.மாலைப்போழுதில் அதன் தோற்ற்றம் இயற்கை மகள் ஏற்றும் விளக்கு போல் விளங்குகிறதாம்.அதன் இதழ்கள் அரக்கு வளையல்களை உடைத்தது போன்றும், அதன் இலைகள் கள்ளை மிகுதியாக உண்டு மயங்கித் திரியும் களியர்க்கு ஒப்பிடுகிறார்.
புலவரும்,கூத்தரும் ,பாணரும் அரசர்பால் செல்லும்போது அவர்கட்கு பரிசலாக நாடும் ,ஊரும் நல்குவதுடன் பொன்னால் செய்த தாமரைப் பூவினை அளிப்பதும் வழக்கம். சில வேளைகளில் வெள்ளி நாரினால் கட்டிய பொற்ப் பூங்கொத்தை பரிசில் நல்குவர் . மேலும் சேர மன்னருக்கு பனம்பூவும் , சோழ மன்னருக்கு அத்திப்பூவும் , பாண்டியர்க்கு வேப்பம்பூவும் அடையாளமாக விளங்கியது.
மலையாள நாட்டில் இன்றும் விஷுக்கனி என்ற பண்டிகையில் செப்பில் அரிசி,பலாப்பழம் ஆகியவற்றை வைத்து அதன்மேல் கொன்றை மலர்களை பரப்புவர். கொன்றை மலர்களை பார்த்தால் வளம் கொழிக்கும் என்பது அவர்கள் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
"
கார்விரி கொன்றை கலந்த கண் நுதலான் "
என தேவாரத்தில் ஞானசம்பந்தர் பாடுகிறார். மென்மையும் அழகும் வாய்ந்த பூவிற்கு நிகராக பெண்ணை கருதி " பூவை " என்று பெண்களை குறித்தனர் .அக்கால விழாக்களில் கமுகு மரம், வாழைமரம் ,வஞ்சியும் , பூங்கொடிகளும் அழகு செய்ய பயன்ப்பட்டது. இன்றும் கூட திருமணங்களில் வெற்றிலையும் ,பாக்கும் ,வாழைமரமும் , மஞ்சளும் பெரும்பங்கு வகிக்கின்றன .திருமணத்தில் " அரசாணிக்கால்" நடுதல் என்ற வழக்கம் சங்ககாலம் முதல் இருந்து வருகிறது. கோவில்களில் மரங்களை " ஸ்தல விருட்சம்" என்றும் மரங்களை கடவுளரின் திருவுருவங்களாகவும் வழிப்பட்டு வருகின்றனர். இவை யாவும் அவர்கள் மரங்களையும் , செடி கொடிகளையும் எவ்வாறு பேணி காத்தனர் என்பதற்கு சான்று.
இன்றைய நவீனமயமாக்கலில் நாம் காடுகளையும் , இயற்க்கை வளங்களையும் இழந்து விட்டோம். முன்னோர்கள் பேணிக்காத்த இயற்க்கை வளங்களை பாதுக்காக்க தவறிவிட்டு இன்று செயற்கை வாழ்வில் சிக்குண்டு கிடக்கிறோம். மரங்களை வெட்டிவிட்டு குளிர்சாதன பெட்டிகளை வாங்கும் மூடர்களை கண்ணை விற்று ஓவியம் வாங்குபவர்கள் என்றே சொல்ல வேண்டும். " வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் " என்ற வள்ளலார் வரிகளை இனியாவது உணரவேண்டும் . மரம், செடி ,கொடிகளின் பயன்களை உணர்ந்து மீதம் உள்ள மரங்களையாவது பாதுக்காக்க வேண்டும் . அடுத்த தலைமுறைக்கு வாழக்கூடிய உலகத்தை விட்டுச் செல்வோம்!!